Description
அமெரிக்க சுவாமியான ராதாநாத் சுவாமியின் வாழ்க்கை வரலாற்று நூல். ரிச்சர்ட் ஸ்லேவின் என்ற இளம் சாதகனாக ஆன்மிகத்தைத் தேடி சிகாகோவின் நகர்ப்புற பகுதியிலிருந்து புறப்பட்டு இமயமலைக்குச் சென்று, பின்னர் ஒரு புகழ் பெற்ற ஆன்மிக வழிகாட்டியாக மாறும் வரை தான் பெற்ற அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார், ராதாநாத் சுவாமி. அவர், தான் மேற்கொண்ட சாகசங்களையும், ஆன்மிகத் தேடலையும், பிரேமபக்தியையும் விவரித்துள்ளார்.அவர் சந்தித்த மகான்களின் நல் உபதேசங்களின் விளைவால், அவரது சிந்தனைகள் தெளிவடைந்தும் விளக்கப்பட்டுள்ளன. அவர் பெற்ற அனுபவத்தைப் போன்று மற்ற எல்லா மக்களும் பெறுவதற்கு இந்த ஆன்மிக பயணக் கதை துணை புரியும். ‘தி ஜர்னி ஹோம்’ என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் டி.கே.சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும்.