நரேந்திர மோடி நேர்மையும் நிர்வாகத் திறமையும்


Author: எஸ். சந்திரமௌலி

Pages: 220

Year: 2014

Price:
Sale priceRs. 150.00

Description

இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும்கூட இன்று அதிகம் பேசப்படும் மனிதராகத் திகழ்பவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி. பல்வேறு தடைகளைத் தாண்டி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகியுள்ள இவர், தனது பிரசார வியூகத்தின் மூலம் மோடி அலை என்ற ஒரு புதிய அரசியல் அதிர்வலையையே ஏற்படுத்தியுள்ளார்.ஒரு சாதாரண குடும்பத்தில் சாமானியராகப் பிறந்த இம்மனிதர், அசாதாரண மனிதராக எப்படி உருவெடுத்தார் என்பதையும், அதற்கான காரண காரியங்களையும் இந்நூலாசிரியர், தனது சகாவுடன் குஜராத்திற்கு நேரடியாகச் சென்று, பல பகுதிகளைப் பார்வையிட்டு, பல்வேறு அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்து, அவர்கள் அளித்த தகவல்கள், புள்ளி விவரங்களுடன் பல தரப்பு மக்களின் அபிப்ராயங்களின் அடிப்படையில் 2008ல் கல்கி வார இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள், வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.2013ல் மீண்டும் இந்நூலாசிரியர் குஜராத் சென்று, அதற்கு பிறகு ஏற்பட்ட வளர்ச்சிகளையும் ஏராளமான தகவல்களுடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக மோடி எப்படி குஜராத் முதலமைச்சராகத் திணிக்கப்பட்டார் என்பது தொடங்கி, 2002ல் நடந்த கோத்ரா கலவரம்.அக்கலவரத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பையும், அச்சத்தையும் தனது நேர்மையான நிர்வாகத் திறமையால் வென்றெடுத்தது. அதற்குப் பின் இன்று வரை எந்தவொரு மதக் கலவரமும் நடக்காமல் பார்த்து வருவது. குஜராத்தை பல துறைகளிலும் வள்ர்ச்சி பெற வைத்தது… என்று பல தகவல்களுடன், மோடியின் ஆரம்ப கால வரலாற்று குறிப்புகளும் படிக்க சுவையாகவும், வியப்பாகவும் உள்ளது.-பரக்கத்.நன்றி: துக்ளக், 26/2/2014.

You may also like

Recently viewed