Description
தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்கியங்களின் வளர்ச்சிப் படிநிலைகளையும் மாற்றங்களையும் நுண்ணணுவினும் நுட்பமாக ஆசிரியர் காட்டியுள்ள பாங்கு வியப்பினை அளிக்கிறது. கலைக்கோட்பாடுகள் இலக்கியத்தையும் கைகோத்து இழுத்துச் சென்றுள்ளன என்பதை நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை சான்றுகளோடு எடுத்துக்காட்டும் நுண்மாண் நுழைபுலம் மருள வைக்கிறது. தமிழகத்தில் கலை இலக்கிய ஒப்புமை ஆய்வில் மலர்ந்த முதல் நூல் இதுதான் என்பதிலும் தமிழகம் பெற்ற நன்முத்து இது என்பதிலும் எந்த மாறுபட்ட கருத்துக்கும் எள்ளளவும் இடமில்லை.- முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்கலையியல் அறிஞர்......................................................இந்நூல் இந்தியக்கலை பற்றிய கருதுகோள்களை எளிமையாக விளக்குகிறது. சமஸ்கிருதச் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் தென்னிந்தியக் கலை வரலாற்றைப் பற்றி எழுத முடியாது எனும் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இவருக்கு இருக்கும் புலமை கலை வரலாற்று ஆய்விற்குக் கைகொடுக்கிறது.- தியடோர் பாஸ்கரன்கலையியல் அறிஞர்