நம்பிக்கைகளுக்கு அப்பால்


Author: மு. புஷ்பராஜன்

Pages: 140

Year: 2014

Price:
Sale priceRs. 125.00

Description

எண்பதுகளில் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபோது அதனை இலக்கியக் கோட்பாடு, ரசனை மற்றும் விமர்சன தளங்களில் பதிவு செய்த படைப்பாளி மு. புஷ்பராஜன். பெரும் விவாதங்களை ஏற்படுத்திய க. கைலாச பதியின் அழகியல் குறித்த இரு முக்கிய கட்டுரைகளில் ஒன்று இத்தொகுப்பில் உள்ளது. அத்துடன் மேரி மக்தலீனா, எம்.எஸ். சுப்புலட்சமி, தஸ்லீமா நஸ்ரீன், ஃப்ரீடா காலோ போன்றவர்களுக்கிடையிலான ஒப்புமைகளை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. மனசாட்சியின் கைதியான மு. புஷ்பராஜன் மிகுந்த சுய விமர்சன உணர்வு கொண்டவர். தனது நம்பிக்கைகளை எப்போதும் அசைத்துப் பார்க்கத் தயங்காதவர். இத்தொகுப்பு அதற்கான சாட்சியாக இருக்கிறது. - யமுனா இராஜேந்திரன்..........................................................................மு.புஷ்பராஜன் ஆரவார இலக்கியச் சந்தையிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர். மு. தளையசிங்கம், ஏ.ஜே. கனகரட்னா ஆகியோரின் சூழலில் தன் சமூக இலக்கியப் பார்வையைச் செதுக்கிக்கொண்டவர். இலக்கியத்தின் மனுக்குல தரிசனத்தின் உயர்ந்த, விரிந்த சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கை மிக்கவர். சோவியத் எழுத்துக்களில் இருந்து கம்பூலாவின் கரையிலிருந்த லத்தீன் அமெரிக்க அரசியல் வரை புஷ்பராஜனின் பார்வை அகன்றது. திரைப்பட ரசனையும் மு. புஷ்பராஜனின் பிறிதொரு பலமான தளமாகும்.- மு. நித்தியானந்தன்

You may also like

Recently viewed