Description
ராமாயணத்திலும் பாரதத்திலும் வரும் கிளைக்கதைகளில் ஒன்றாகிய அகலிகையின் கதையை, தமிழ் எழுத்தாளர்கள் பலர் பல்வேறு கோணங்களில் அலசியுள்ளார். ராஜாஜி, புதுமைப்பித்தன், கம்பதாசன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், க. கைலாசபதி உள்ளிட்ட 19 அறிஞர்கள் புதிய கண்ணோட்டத்தில் அகலிகையைப் பார்த்திருக்கிறார்கள்.அவற்றை ஒருசேர பருகும் வாய்ப்பு இந்நூலில் கிட்டுகிறது. படிக்கப் படிக்க அகலிகை பற்றிய படிமம் நம்முன் புதுவிதமாக காட்சிப்படுத்தப்படுகிறது. நல்ல முயற்சி.நன்றி: குமுதம், 19/3/2014,