Description
தலைமுறைகளைக் கடந்து ஜெயித்த தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியர் மறைந்த வாலி. இவர் சந்தித்த அரசியல், சினிமா ரகசியங்கள் பல இருந்தாலும் அவற்றில் 100 சம்பவங்களை தொகுத்து நூலாக்கப்பட்டு உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள எம்.ஜி.ஆருக்கு பிடித்த கவிதை வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.அதேபோல் ஈழத்தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து “புலால் திண்ணும் புத்தன்’’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை கண்ணீரை வரவழைக்கிறது. கோபாலபுரமும், ராமாபுரமும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தியில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டியதையும் தெளிவு பட கூறிப்பிடப்பட்டு உள்ளது.“ஒரு மனிதன் வெற்றியை தலைக்கு கொண்டு போக கூடாது, தோல்வியை இதயத்திற்கு கொண்டு போக கூடாது’’ என்ற வாலியின் பல அனுபவ மொழிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.