தமிழ்நாட்டுப் பறவைகள்


Author: முனைவர் க. ரத்னம்

Pages: 182

Year: 2002

Price:
Sale priceRs. 300.00

Description

மயில், குயில், குருவி, கிளி, புறா, காகம், ஆந்தை, மரங்கொத்தி, உள்ளான், முக்குளிப்பான் என தமிழகத்தில் அதிகம் காணப்படுகிற 328 பறவைகளைப் பற்றிய நூல். அவற்றின் உடல் அமைப்பு, நிறம், குரல், குணம், உணவு, வாழுமிடம், இனப்பெருக்க காலம், கூடுகள், முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் கொட்டிக் கிடக்கிற அரிய நூல்.குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட பலருக்கும் பறவை இனங்களை விரைவாக அடையாளம் காண உதவும் வகையில் நுலாசிரியர் விளக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.பறவைகளின் தமிழ்ப்பெயர், ஆங்கிலப்பெயர், அறிவியல் பெயர், குடும்பப் பெயர் ஆகியனவற்றோடு பறவைகளின் உடல் அமைப்பையும், நிறத்தையும் வண்ண ஓவியங்களாகவே வடித்திருப்பது நூலுக்கு மேலும் மெருகு கூட்டியிருக்கிறது.ஒருசில பறவைகளின் வண்ணப் புகைப்படங்களும் நூலில் ஆங்காங்கே இடம் பிடித்திருக்கின்றன. நூலாசிரியரின் அளவு கடந்த ஆர்வத்தாலும் வித்தியாசமான முயற்சியாலும் விளைந்த இந்த நூலுக்கு தமிழக அரசு முதல் பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறது.தெரிந்த பறவைகளாக இருந்தாலும், அவற்றைப் பற்றித் தெரியாத பல செய்திகளைச் சொல்லி இருக்கிற சிறந்த நூல்.நன்றி: தினமணி, 24/2/2014.

You may also like

Recently viewed