Description
சுமார் 25 வருடங்களாக, மின்னணுத் துறையில் வெற்றிகரமான சிறு தொழில் அதிபராகத் திகழ்ந்து வரும் இந்நூலாசிரியை, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சிறு தொழில் பற்றி பல பயிலரங்க வகுப்புகள் எடுத்துவருகிறார். இளைஞர்களிடத்தில் சிறு தொழில் மற்றும் சுயதொழில் குறித்த விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கையில் போதிய முதலீடும், வியாபாரப் பின்புலமும் இன்றி, இத்துறையில் தன்னால் இவ்வளவு பெரிய உயரத்தை எப்படி அடைய முடிந்தது என்பதை, தனது அனுபவத்தைக்கொண்டே இந்நூலில் விளக்கியுள்ளது சிறு தொழில் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.தொழில் தொடங்கப் பணம் இல்லையே என்ற கவலையே தேவையில்லை. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், நம்பகத் தன்மையும், சலியாத உழைப்பும்தான் தேவை என்பதை வலியுறுத்தும் ஆசிரியை, இவற்றால் ஏற்படும் பலன்களை பலரது அனுபவங்களைக் கொண்டும் கூறியுள்ளது தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.இத்துறையில் காபி வியாபாரம் முதல் எலெக்ட்ரானிக் வரை பல வியாபாரங்களிலும் என்னென்ன வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன? ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகத் திகழ்வது எப்படி? கிடைத்த செல்வத்தைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி? இப்படி நம் மனதில் தோன்றும் பல வினாக்களுக்கு இந்நூலில் எளிய விளக்கங்களைப் பெறலாம்.