Description
தமிழில்: செங்கதிர், எம். கோபாலகிருஷ்ணன், க. மோகனரங்கன், விஜயராகவன்ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத, ஆளுமையான கார்வரின் கதைகள் தமிழில் இப்போதுதான் முதன்முறையாகத் தொகுப்பாக வெளிவருகிறது. நேரடியாகச் சொல்லும் யதார்த்தவாதக் கதை மரபின் மீதிருக்கும் கோணல் பார்வையையும் எள்ளலையும் வெகு சாதாரணமாகத் துடைத்தெறியும் இக்கதைகள் தமிழுக்கு மிக முக்கியமான வரவாகும்.