Description
பாப் இசைஉலகின் முடிசூடா மன்னன் என்று இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்ய பின்னணியுடன் கொண்டு வந்திருக்கும் நூல். புகழின்உச்சியில் அவர் இருந்தபோதே கவ்விக் கொண்ட திடீர் மரணம் எழுப்பிய கேள்விகளுக்கு ஊகங்களின்அடிப்படையிலான பதில்களை தந்திருப்பதோடு, அவரது இசை சாதனைகள், குடும்ப பின்னணி வரை சொல்லி மைக்கேல் ஜாக்சனின் இதுவரை அறிந்திராத இன்னொரு பக்கத்தையும் புரட்டியிருக்கிறார்கள்.சிக்கலான உடல் அசைவுகள் கூட அவர் நடனத்தில் சர்வ சாதாரணமாக வெளிப்பட்டு ரசிகர்களின் பரவசத்தை அதிகரிக்கும். மரணத்திலும் சிக்கல் என்பது தான் இந்த நடனக் கலைஞனின் ரசிகர்களுக்குஇன்றளவும் சொல்லி முடியாத சோகம்.