Description
சித்ராலயா கோபுவும் டைரக்டர் ஸ்ரீதரும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தவர்கள். பழகியவர்கள், அந்த எழுபது வருட நட்பை, திரை உலகில் ஸ்ரீதர் உடனான அனுபவத்தை உள்ளது உள்ளபடி கோபு எழுதியிருக்கும் நூல்.ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் அவரை எப்படி இயக்குநராக உருமாற்றியது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். நகைச்சுவை எழுத்தாளர்கள் அருகி வரும் இக்காலத்தில் கோபுவின் இந்த ஞாபகம் வருதே நூல் ஒரு வரப்பிரசாதம்.நன்றி:குமுதம், 26/3/2014.