Description
நம் இந்திய நாட்டுக்கு வாணிபம் நடத்த வந்து, பின்னர் நாடாள்பவர்களாக மாறிய ஆங்கிலேய, பிரெஞ்சுக் கம்பெனியாரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய வீரவேந்தர்கள் பலர். அவர்களுள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூரை ஆண்ட மன்னன், சாம்ராட் ஹைதரலியின் சபதத்தை மையமாகக்கொண்டு படைக்கப்பட்ட நாவல்.தன் சூளுரைக்காக அவன் நிகழ்த்திய போர்களையும், அவற்றால் அல்லலுற்ற தமிழக மக்களின், குறிப்பாக வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் சமூக வாழ்க்கையினையும் படம் பிடித்துக் காட்டும் வரலாற்று புதினம்.கிராம வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று புதினமாதலால் அக்காலக் கல்வி, கலைகள், சமயம், சமுதாயம், குடும்பம், மகளிர் நிலை, மக்கள் நிலை, அரசியல் நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றை படம் பிடித்து காட்டியுள்ளார்கள் முனைவர் மா.சு. சாந்தாவும், பேராசிரியர் மா.சு. அண்ணாமலையும்.நன்றி: தினத்தந்தி, 19/3/2014