Description
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுகளை கொண்டுள்ள அவரது கதைகள் முடிவில் அவற்றை அத்தகைய எதிர்ப்பார்ப்புகளிலிருந்து விலக்கி முற்றிலும் வேறான, தீவிரமானதொரு பதற்றத்தை உருவாக்கும் தொனியைக் கொண்டவை. தேவிபாரதியின் கதைகள் க்ரைம் டிராமாவிற்கான வகைமைக்குள் அடைப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கதையின் முடிச்சை அவிழ்க்கும் தருணம் அதைக் குலைத்து அத்தருணத்தை கதைக்கு அப்பாற்பட்ட சொல்லாடலுக்கான வெளியாக விரித்தெடுக்கிறது.- சொர்ணவேல் (பின்னுரையில்)