Description
ஒரு கவிஞரின் பாடல்களைத் தொகுத்து நூல்களாக வெளியிடுவது சாதாரணப் பணியன்று. கவனக்குறைவால் வேறு கவிஞர்களின் பாடல்கள் இடம் பெறுவது வாடிக்கை.அந்தத் தவறு நடவாமல் தஞ்சை ராமையாதாஸின் திரை இசைப் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இந்நூலின் தொகுப்பாசிரியர். ஒரு பாடலைக் கேட்கும்போது அதை எழுதியவர் யார் என்று அறிந்துகொள்ள இந்நூல்கள் உதவும். நம்மைவிட்டு மறைந்த திரைக் கவிஞர்கள் அவர்கள் எழுதிய பாடல் வரிகள் மூலம்தான் இன்றைக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள்.அந்த வகையில் ஜாலிலோ ஜிம்கானா போன்ற துள்ளலிசைப் பாடல் உள்ளிட்ட பல பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸை இந்நூல் வழி நம்மோடு இன்றைக்கும் பயணிக்கச் செய்திருக்கிறார் தொகுப்பாசிரியர்.நன்றி: குமுதம், 12/3/2014.