Description
இந்திய அளவில் நடைபெறும் சம்பவங்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் மத்திய-மாநில அரசுகளும் சரி, அவைகளை வழிநடத்தும் கட்சிகளும் சரி தாம் கொண்டிருக்கும் கொள்கைகளைத் தெளிவாக விமர்சித்துள்ளார் ஆசிரியர்.உலகமயமாக்கலால் காங்கிரஸ் அரசின் தலைமையில் இந்தியா தள்ளப்பட்டுள்ள படுகுழியையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கட்சிகளின் சந்தர்ப்பவாத வாரிசு அரசியல், மத்திய அரசின் நீர்க்கொள்கை, உணவுக் கொள்கை. இலங்கியைல் தமிழ் இன அழிப்பில் இந்திய அரசின் நடுநிலை தவறிய அரசியலின் கோர வடிவம் என்று ஒன்றுவிடாமல் விமர்சிக்கிறார்.உண்மையில் பக்கம் நின்று அச்சமின்றி இப்பூவை அவர் மலரச் செய்திருக்கிறார். அரசியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் படிக்க வேண்டிய பாடநூல் இது.நன்றி: குமுதம், 12/3/2014.