Description
எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதியப் பாட்டெல்லாம் கதாநாயகனுக்காக இல்லாமல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே இருக்கும். தவிர, எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கிணங்க, விருப்பத்திற்கினங்க வாலி எழுதிய பாட்டெல்லாம் மிகவும் பிரபலமானவை.நான் அரசனென்றால் என் ஆட்சி என்றால் என்ற வரிகள் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று மாறியதாக வாலி கூறுகிறார். அதேபோல் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல் என்பது திரு.வி.க.போல் என்றும் மாறியதாம்.எம்.ஜி.ஆரிடம் இருந்த நெருக்கம், அவரிடம் கற்ற பாடங்கள், அவர் வாலியிடம் கோபித்துக் கொண்ட நிகழ்ச்சிகள் என பல அனுபவங்களை வாலி எழுதியுள்ளார்.சத்தியபாமாவிற்கு மகன். ஆனால் சாதாரண மக்களுக்கு அவர் மகான் என்றும், பாம்பே இல்லாமல் எல்லாம் ஏணிகளாகவே அமைந்த பரமபதம் மாதிரி அவர் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாட்டு எழுதி உயர்ந்ததை குறிப்பிடுகிறார்.இன்னும் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருக்கலாம் என்று கூறும் அளவிற்கு அழகிய தமிழில் எழுதப்பட்ட அற்புதமான நூல்.நன்றி: தினத்தந்தி, 5/3/2014..