Description
உன்னதமான ஆன்மிக குருவைத் தேடி 1930 களில் மேற்கத்திய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பால் ப்ரன்டன், தனது அனுபவங்களை விவரித்து இருப்பது வியக்க வைக்கிறது.மேஜை மீது இருக்கும் இரும்புக் கட்டியை எந்த தொடர்பும் இல்லாமல் நடனமாட செய்தவர், இறந்து போன பறவையை உயிர்ப்பிக்க செய்தவர், ஒருவரது மனதில் உள்ள கேள்வியை மாயாஜாலம் மூலம் படித்து, அதற்கு பதிலை எழுதிக் காட்டியவர் என்று அவர் சந்தித்த யோகிகள், தெருவோர மந்திரவாதிகள், தந்திரக்காரர்கள் பற்றி அவர் தரும் தகவல்கள் மூலம் இந்தியாவில் விளங்கிய வித்தியாசமான மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இறுதியில் காஞ்சிப் பெரியவர் மூலம், திருவண்ணாமலை ரமண மகரிஷியை அவர் குருவாக அடைந்த வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.