Description
சேது காப்பியம் என்ற பெயரில் சமகாலத் தமிழர்களின் சமூகம், அரசியல், கலை, திரைப்படம், இதழியல் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முன்னுதாரணக் காப்பியமாக படைத்துத் தந்துள்ளார் பெருங்கவிக்கோ.ஐந்தாவது காண்டமான இந்நூல், வாழ்வியற் கூறுகளையும் வரலாற்றுக் கூறுகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது தனிச் சிறப்பு. காப்பியத் தலைவர் அருள்மொழியன், அவரது துணைவி சேதுபதி ஆகியோரின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட அல்லல்களை சுவைமிக்க பாக்களால் ஆக்கியதோடு நில்லாமல், அதை சமகாலத் தமிழ்நாட்டு வரலாற்றுப் பின்புலத்துடன் விரிவாக விளக்கியுள்ளார். இது ஒரு எழுச்சிமிகு வரலாற்றுக் காப்பியமாகும்.நன்றி: குமுதம், 9/4/2014.