Description
பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், நாயன்மார்களின் குறிப்புகளும், பாரதியார் பாடல் வரிகளும் விரவிக் காணப்படுகின்றன. இவை படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றன.சிவனடியார்கள் படிக்க வேண்டிய அருமையானநூல்.-கலியன் சம்பத்து.நன்றி : தினமலர், 17 பிப்ரவரி 2013.