Description
ஷ்ர்லி, சல்மான் ருஷ்டி, ஜான்ஸ்டேன் ஜான்சன், ஆன்டன் செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா, ஐஸக் பாஷெவிஸ், சிங்கர், பிரதிபாரே, பென் ஓக்ரி, லூவிஸ் எட்ரிச் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருக்கும் நூல்.அந்நிய நாட்டின் மோகத்தால் தாய் நாட்டை பழிப்பதில் எதிர்காலத் தலைமுறை அடையும் பிரச்னைகள், சகோதரத்துவத்தின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் சோகம், காதலின் பிரிவு, இப்படிப் பல கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு படிப்பவர்களைக் கதை நிகழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கே கொண்டுபோகின்றன.குறிப்பாக ஆன்டன் செகாவ் எழுதியிருக்கும் ஒரு எழுத்தரின் மரணம் சிறுகதையின் கடைசி வரிகள் நம்மை அதிரவைக்கின்றன. இந்திய எழுத்தாளரான பிரதிபா ரே எழுதியிருக்கும் தேவகி சிறுகதையும் கனத்த சோகத்திற்குள் நம்மை மூழ்க வைக்கிறது.நன்றி: தினமணி, 24/9/2012.