Description
காமராஜரைப் பற்றி அருமையான நூல் எழுதிய பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது. யார் யாருக்கோ நூல்கள் உள்ள இந்த நாட்டில் தன்னலமற்ற தேசத் தொண்டர் கக்கனுக்கு அதிக நூல்கள் இல்லையே என்பது என் ஆதங்கம் என்ற முன்னுரையுடன் துவங்கியுள்ள நூலாசிரியர், நூறு கட்டுரைகளாக தந்துள்ளார்.கக்கன் பற்றி அவ்வளவாக பதிவுகள் இல்லாத நிலையிலும், நூலாசிரியரின் அயராத தேடல், புதிய தகவல்களை நமக்கு தருகிறது. எளிமையே எனது வாழ்க்கை என்று வாழ்ந்த காந்தியையும், கக்கனையும் பல இடங்களில் ஆசிரியர் உதாரணங்களோடு ஒப்பிட்டுள்ளார். இன்றைய அரசியல்வாதிகள் கவனித்து படிக்க வேண்டிய புத்தகம்.