தமிழ் சினிமா வரலாறு பாகம்-1


Author: தினத்தந்தி

Pages: 528

Year: 2014

Price:
Sale priceRs. 360.00

Description

உலகின் முதல் பேசும் படம் ஜாஸ் சிங்கர், தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ் போன்ற தகவல்களுடன் தொடங்கி சாதனை படைத்த சினிமா படங்கள், புகழ் பெற்ற கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகளுடன் தமிழ் சினிமா வரலாறு பாகம்-1 வெளிவந்துள்ளது. பவளக்கொடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஆன தியாகராஜ பாகவதர்; புகழ் உச்சியில் இருந்தபோது, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் ஆயுள் தண்டனை பெற்றது; சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். ராஜகுமாரி மூலம் கதாநாயகன் ஆகி வசூல் சக்கரவர்த்தி ஆன வரலாறு; பராசக்திÕயில் நடித்து முதல் படத்திலேயே சிகரம் தொட்ட சிவாஜி கணேசன் ஆகியோர் வரலாறு இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஜெமினி கணேசன், சாவித்திரி, பானுமதி, பத்மினி, எம்.ஆர்.ராதா, கண்ணதாசன் போன்றோரின் வரலாறும் இடம் பெற்றுள்ளன. 500க்கும் மேற்பட்ட கண்ணைக் கவரும் வண்ணப்படங்கள்.பட அதிபர் ஏவி.எம். சாரவணன் தமது அணிந்துரையில், நிச்சயமாக இது புத்தகம் அல்ல; புதையல்! கலை உலகத்துக்கு தினத்தந்தி செய்துள்ள பெரிய சேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Recently viewed