Description
தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு 100 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது. அது இப்போது தந்தி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 400 பக்கங்கள்.முழுவதம் கண்ணைக் கவரும் வண்ணத்தில். ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்தது, பின்னர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ்ப்பட உலகில் அறிமுகமானது.படிப்படியாக சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது. திருப்பதியில் நடந்த திருமணம், இமயமலைப் பணங்கள், இப்படி ரஜினியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் விறுவிறுப்பான நாவல்போல எழுதப்பட்டுள்ளது.புதிய முறையில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் லிங்கா ஆகிய படங்கள் பற்றிய விவரங்களும் உள்ளன. ரஜினி பற்றி ரஜினி இதுவரை அவர் நடித்த படங்களின் முழு விவரங்கள் கொண்ட பட்டியல் ஆகியவை ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.சுமார் 300க்கு மேற்பட்ட வண்ணப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அச்சும், வடிவமைப்பும் மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால்விடுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இப்படி ஒரு புத்தகம் இதுவரை வெளிவந்தது இல்லை.பட உலகில் கோச்சடையான் ஒரு மைல் கல். திரைப்படத்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களில் இது ஒரு மைல்கல்.