Description
பூமி சூரியன் இடையேயான தூரத்தை கணக்கிட்ட இந்திய அறிவியல் இணையில்லா இந்திய அறிவியல் புத்தகம், இந்தியர்களின் அறிவியல் அறிவை விவரிக்க துவங்கும்போதே, ஆச்சரியங்கள் நம்மை கவ்விக்கொள்கின்றன.ஐரோப்பிய அறிஞர்களின், கணிதம், அறிவியல் கண்டுபிடிப்புகளை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்திய இதிகாசங்கள், அவற்றை போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றன என்பதை, ஆதாரங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.இந்தியர்கள், வேதகாலம் என அழைக்கும் கி.மு. 1500 – கி.மு.500 காலகட்டத்தில், சமஸ்கிருத மொழியியல், செய்யுள், பிரார்த்தனைக்கான சுலோகங்கள் ஆகியவற்றில், அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவற்றை நாம், புரிந்துகொண்டு வெளிப்படுத்த தவறிவிட்டோம் என்கிறார் பேராசிரியர்.நவீன அறிவியல் உலகம் கண்டுபிடித்ததை, புராணங்கள் மிக எளிதாக, விவரித்துள்ளன. பித்தகோரஸ் தியரி, துத்தநாகம் பிரித்தெடுத்தல், அறுவை சிகிச்சை, விமானங்கள் என, அறிவியலின் மிகச் சவாலான விஷயங்களை, முதலில் சொன்னவர்கள் இந்தியர்களே என, ஆணித்தரமாக, ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.ஆக்கப்பூர்வமான படைப்பை கொடுத்துள்ள, பை கணித மன்றத்தை பாராட்டலாம்.