Description
காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளைப் பற்றி எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எழுதியுள்ள நூல் சந்திரசேகரம். மிகச் சிறந்த ஞானிக்கு இலக்கணமாகவும், சன்யாசிக்கு இலக்கணமாகவும், மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்தவர் காஞ்சி பெரியவர்.அவருடைய ஆருளுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக விளக்கங்களையும், பெரியவரின் பெருமைகளையும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் அழகிய முறையில் எடுத்துக்கூறுகிறார். காஞ்சிப் பெரியவரை பார்க்காத-அவரைத் தரிசிக்க வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு பெரியவரின் உன்னத பண்புகளை எடுத்துக்கூறி ஒரு உண்மையான துறவியை-மகானை அடையாளம் காட்டுகிறார்.இந்த நூலைப் படிக்கும்போது ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.