Description
‘வரலாற்றுச் சுவடுகள்’ நெடுந்தொடர் தினத்தந்தியில் வெளியானபோது அதில் ஒரு பகுதியாக, ‘இலங்கைத் தமிழர் வரலாறு’ இடம் பெற்றது. அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை நூலாக வெளியிட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், வாசகர்களும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இப்போது இலங்கைத் தமிழர் வரலாறு 576 பக்கங்கள்கொண்ட வண்ண நூலாக மலர்ந்துள்ளது.‘வயிற்றுப் பிழைப்புக்காக இலங்கைக்குப் போன தமிழர்கள் தனி நாடு கேட்பது என்ன நியாயம்?’ என்று நம்மில் பலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில், ‘இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்’ என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டும் அத்தியாயத்தில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் படுகொலை; இதைத்தொடர்ந்து, ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் வெற்றி; இலங்கையில் நடந்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காமன்வெல்த் மாநாடு; முருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது; ராஜீவ் கொலையாளிகள் 3 நாளில் விடுதலை–ஜெயலலிதா அறிவிப்பு; இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு... என்பது வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடனும், ஆதாரப்பூர்வமாகவும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.