Description
கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர். நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டா ளராகவும் விளங்கினார்.
இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் கதைகளையும் உதாரணங்களாகக் கையாண்டார்.
அவரது கட்டுரைத் தொகுப்பின் தலைப்பான தீப்பற்றிய பாதங்கள் என்பதும் அவ்வாறு ஒரு நாட்டார் கதையிலிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் பனுவல்களைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுரை என்பதும் இலக்கிய வடிவங்களில் ஒன்று என்பதையும் வெவ்வேறு அறிவுத்துறைகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் களால் ஆய்வுகளில் மேலும் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்பதையும் இக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இத்தொகுப்பு, தமிழ் அறிவுலகிற்குக் குறிப்பிடத் தக்க நல்வரவு.
காலனியமும் பார்ப்பனியமும் உருவாக்கிக் கொடுத்த சட்டகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து, அரசியல்ரீதியாக உபயோகமான சில வடிவங்களை நமக்குக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் டி. ஆர். நாகராஜ். மரபார்ந்த சமுகத்தின் கோரமான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய அரசியல் பாரம்பாரியம் நமக்கு உண்டு. நவீனத்தின் போதாமைகளை வெளிப்படுத்திய பாரம்பரியமும் நமக்கு உண்டு. ஆனால் இவ்விரண்டும் அரசியல்ரீதியாக ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன