Description
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், சினிமா மீதான அக்கறை, ஆர்வம் எல்லாமே புதிய பரிமாணங்களைப் பெறுகின்றன.சினிமா மீதான மக்களின் ஆர்வம் ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமீப ஐந்தாண்டுகளில் அந்த ஆர்வம் பல்வேறு மட்டங்களில் புதிய பரிணாமங்களைப் பெற்றுள்ளது. சினிமா ஆர்வம் என்பது இன்று சினிமா பார்க்கும் ஆர்வம் மட்டுமல்ல, சினிமாவைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம், சினிமாவின் ரகசியங்களைத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம், ஏன் அந்த சினிமாவை நாமே எடுத்துப் பார்க்கலாமே என்கின்ற படைப்பார்வம்.. என பல மட்டங்களில் அது விரிந்துள்ளது.சினிமாவின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, டிஜிட்டல் யுகத்தில் அதன் பல்வேறு ரூபங்கள் குறித்து, சுவாரஸ்யம் குறையாமல் புதிய கோணத்தில் பார்க்கின்ற முயற்சியாகவும் இப்புத்தகம் அமைந்துள்ள்து.