பள்ளியெழுச்சி பாவைப்பாடல்கள்


Author: இளையராஜா

Pages: 96

Year: NA

Price:
Sale priceRs. 100.00

Description

இசையே சிவன், சிவனே இசை என்ற சுந்தரர் வாக்குப்படி இசைஞானி சிவஞானி ஆகியிருக்கிறார். பாவை பாடிய வாயால் கோவை பாடுக என மாணிக்கவாசருக்கு சிவன் ஆணையிட்டதுபோல், பாவைப் பாடல்கள் பாடிய வாயால் திருப்பள்ளி எழுச்சியையும் பாடவைத்திருக்கிறார்.பாவைப் பாடல்கள் 20, திருப்பள்ளி எழுச்சி 10 என்று இசைஞானி அருளியதை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது பெருமை. பாவைப் பாடல்களில் பெண்களைத் துயில் எழுப்பி இறைவன் புகழ்பாடி அருள்பெற வைக்கிறார். இங்கே பெண்கள் என்பது மானுடத்திற்கான குறியீடு.உண்மையில் அவர் இருளில் கிடக்கும் ஆன்மாவையே எழுப்புகிறார், சிவன் அருள்பெற. திருப்பள்ளியெழுச்சியில் இறைவனையே எழுப்பி அருள் கேட்கும் உரிமை பாமரனுக்கும் உண்டு என்றே நிறுவுகிறார். நாங்கள் அறுபத்து மூவரில்லை. தவமுனிவருமில்லை. குரல் எழுப்ப ஏழையானோம்.கொற்றவனே குற்றமறப் பள்ளி எழுந்தருளாய் என்று சிவனை எழுப்பி அருள் கேட்கும் உரிமை ஏழைக்கும் உண்டென்கிறார். சிவனை உணர்ந்து ஓத வேண்டும். மனத்தை எங்கேயோ வைத்து சடங்குக்காகப் பாடினால் பயன் இல்லை என்ற மூட வழக்கையும் சாடுகிறார். தான் பெற்ற இன்பம் உலகம் பெற இசைஞானி காட்டும் பக்திநெறி என்றே இந்நூலை எண்ணத் தோன்றுகிறது. பாவை பள்ளி எழுச்சி முப்பதும் செப்பினார் வாழியே.

You may also like

Recently viewed