Description
தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் பதிவு இந்நூல். அத்தனையும் டாக்டர் அம்பேத்கர் தந்த ஒளியில் தரப்பட்ட தீர்ப்புகளின் தொகுப்பாக பதிவாகியுள்ளது.பஞ்சமி நிலத்திற்காக, கல்லறை சமத்துவத்திற்காக, கழிப்பறைக்காக, சாதி மறுப்பு திருமணங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமைச் சுவர் தகர்ப்பு, கோயில்களில் வழிபாட்டு உரிமை, தலித்களின் வாழ்வுரிமை என்று நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் சட்ட சரித்திரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.தீர்ப்பில் அவர் அளிக்கும் மேற்கோள்களும் தகவல்களும் ஆதாரங்களும் வியக்க வைக்கின்றன. சந்துருவின் படிப்பாற்றலை நிரூபிக்கின்றன. தீர்ப்புகள் அனைத்தும ஆங்கிலத்தில் உள்ளன. தமிழிலும் தந்தால் இன்னும் நூலின் பயன் கூடும்.