Description
சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள்உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது.நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் எளிய மொழியில் உயிர்ப்புடன் எழுதி உள்ளார்.திரிசங்கு, நுடம், தையல், ஈரம், நாலேகால் டாலர், தம்மக்கள் போன்ற சிறுகதைகள் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது.