மணிமேகலை


Author: அரும்பதவுரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர்

Pages: 776

Year: NA

Price:
Sale priceRs. 320.00

Description

தமிழ்த்தாயின், ஐம்பெருங்காப்பியங்களில், இரட்டைக் காப்பியங்கள் என்று பெருமையாகக் கூறுவது சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரு நூல்கள் ஆகும். இந்நூலைத் தேடி பல ஊர்களுக்குச் சென்று, 10 கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டி, ஒப்பிட்டு அவற்றுள் குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் இருந்த பாகங்களை எல்லாம் ஒழுங்கு படச் செய்தளித்த டாக்டர் உ.வே.சா.வுக்கு தமிழ் மக்கள் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.இந்நூல் மாதவியின் மகள், மணிமேகலையின் வரலாறு கூறுவதாக இருப்பினும், நூலின்கண் பல நீதிகள், புத்த சரித்திரம், பவுத்த தருமம் முதலியனவும் இருப்பதால் நூலின் மேன்மை தெரிகிறது. மணிமேகலையின் கதைச் சுருக்கம் முதலிலும் பாடல்களுக்கு அரும்பதவுரை பின்னும் கொண்டதாக இருப்பதால், நூலை எளிதாக கற்க இயலும்.இந்நூலில் வந்துள்ள வேறு கதைகள், புத்தரின் பல பெயர்கள், அரும்பத அகராதி முதலியனவும் பிற்சேர்க்கையில் இருப்பது மிகவும் பயனுள்ளதாகும். ஒன்பதாம் பதிப்பாக இந்நூல் வெளிவர, நிதி உதவிய தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.கல்லூரி, பள்ளி, பொது நூலகங்களிலும், தமிழ் ஆர்வலர்கள் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒப்பற்ற நூல்.

You may also like

Recently viewed