Description
இருபதாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் திராவிட இயக்கச் சிந்தனையில் உருவான கவிஞர்களுள், பகுத்தறிவு, கடவுள் எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி சமய எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பல தளங்களில் செயல்பட்டுத் தன் பாடல்களின் மூலம் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களில் வாணிதாசனும் ஒருவர்.சீர்திருத்தக் கொள்கைப் பிடிப்புள்ள சமூகச் சிந்தனையாளராகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அவர். பகுத்தறிவுப் பயிர் செழிக்கவும், தன்மானத் தணல் பெருகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்ட வாணிதாசனின் கவிதைகளில் சிலவற்றை இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார் தொகுப்பாசிரியர் மகரந்தன்.