இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்


Author: டாக்டர் சங்கர சரவணன்

Pages: 480

Year: 2014

Price:
Sale priceRs. 195.00

Description

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன்.UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!

You may also like

Recently viewed