Author: இரா.முருகவேள்

Pages: 278

Year: NA

Price:
Sale priceRs. 230.00

Description

சிலப்பதிகாரம் துவங்கி பன்னாட்டு வணிகம் வரைமிளிர்கல் என்ற நாவலைப் படித்து முடித்துள்ளேன். இந்த நாவலை திருப்பூரை சேர்நத் இரா. முருகவேசள் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார். பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முருகவேள், ஆங்கில நாவல்கள் சிலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு ஆகியவை அவரின் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை. எரியும் பனிக்காடு நாவல், ரெட் டீ நாவலின் மூலம். இந்த நாவல்தான், பாலாவின் பரதேசி படத்தின் கதை. மிளிர்கல் நாவல் சிலப்பதிகாரத்தின் அடுத்த கட்டம் என, சொல்லலாம். மதுரையை எரித்துவிட்டு கண்ணகி அங்கிருந்து வெளியேறிய பின், எங்கு சென்றார் என்ற தேடலோடு நாவல் துவங்குகிறது.கொங்கு நாட்டின் காங்கேயம் பகுதியில் கிடைக்கும், ரத்தின கற்கள், பன்னாட்டு வணிகத்துக்கு எப்படி சென்றன, அதில், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் அரசியல் என்ன என்பதையும் இந்த நாவல், சொல்கிறது.இதோடு, ரத்தின கற்களை பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் நிலை என்ன, அவர்களின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதும் விவரிக்கப்படுகிறது. சமகால அரசியல், சமூக நிலைகள் குறித்தும், மிளிர்கல் நாவலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் விறுவிறுப்பு மட்டும் இருக்க வேண்டும் என, நினைக்காமல், புதிய தகவல்களுடன் சித்தரிக்கப்பட்டு உள்ளது வரவேற்புக்குரியது.இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பன்னாட்டு பொருளாதார விவகாரங்களும், நாவலில் இடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், தமிழர்களால் போற்றப்படும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மிச்சங்களைத் தேடியும் நாவல் செல்வது பாராட்டுக்குரியது.

You may also like

Recently viewed