Description
மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு.இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விவரங்கள் இதில் விளக்கமாக உள்ளன.சுருக்கமாகச் சொன்னால் ரேஷன் கார்டு பற்றி ஏ முதல் இசட் வரையில் உள்ள எல்லா தகவல்களும் இதில் அடங்கியுள்ளன. கார்டு வாங்குவதற்கான விண்ணப்ப மனுவும் இணைக்கப்பட்டுள்ளது. மிகப் பயனுள்ள புத்தகம்.