Description
திராவிட மாயை முதல் பகுதி பிப்ரவரி 2010இல் வெளிவந்தது. ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது இரண்டாம் பகுதி உங்களிடம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட என்றே பொதுவெளியில் நான் அறியப்படுகிறேன். அடையாளங்கள் அனைத்தையும் தவிர்த்து விட்டு ஏகாந்தமாக வாழ வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இருந்தாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த முன்னொட்டைத் தவிர்க்க முடியாது. சரி, நம்முடைய எழுத்துக்கு ஏதாவது பலன் உண்டா அல்லது அறிவுஜீவிகளின் பாஷையில் சொன்னால், சமூகத் தாக்கம் உண்டா என்று யோசித்துப் பார்த்தால், இருக்கிறது என்பதுதான் விடை. முதலில் எதிர்தரப்பைப் பற்றி சொல்லிவிடுகிறேன். திராவிட இயக்கத்தின் சொத்துக்கு வாரிசாக இருப்பவரும், திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு சொத்து சேர்த்தவரும், இரண்டு பேரும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்திருக்கிறார்கள் என்பது ஒரு செளிணிதி. இது என்னுடைய எழுத்துக்கு மட்டுமே கிடைத்த மரியாதை என்று மார் தட்டிக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் பலர் திராவிட மாயை புத்தகத்தை விற்பதையும்,பரிசளிப்பதையும், அறிமுகப்படுத்துவதையும், சிலாகிப்பதையும் சிறப்பாகச் செளிணிதிருக்கிறார்கள். சமூகத்தின் பலன் ஒருபுறமிருக்க நானடைந்த பலனை சுலபத்தில் சொல்ல முடியாது. அதை என் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொள்கிறேன்... ஈ.வெ.ரா.வின் திசையிலிருந்து விலகிப் பயணித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அவரை வழிநடத்திச் சென்ற சி.என்.அண்ணாதுரையும் பிற்காலங்களில் எவ்வாறு பண்பட்டிருந்தார் என்பதையும், இந்திய அரசமைப்புக்குள் தன்னுடைய கட்சியை அழகாகப் பொருத்திக் கொண்டார் என்பதையும் இதில் எழுதியுள்ளேன். ஈ.வெ.ரா.வின் வெகுஜன விரோதப் பாதையிலிருந்து விலகித் தன் கட்சியை நடத்தியவர் அண்ணாதுரை ஆனால் அண்ணாதுரையின் கொள்கைகளை அண்ணாதுரையின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மறந்துவிட்டார். கட்சியை ஈ.வெ.ரா.விடம் அடமானம் வைத்துவிட்டார். அடுத்த கட்டத்தில் இந்தச் சீர்கேட்டில் இருந்து விலகி, எம்.ஜி.ஆர். அண்ணாதுரையின் பாதையில் அ.தி.மு.க.வை நடத்திச் சென்றார். தமிழக அரசியல் வரலாற்றை அதிலும் திராவிட இயக்கங்களை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய முயற்சி. இதில் 1917 முதல் 1944 வரையிலான காலகட்டம் ‘திராவிட மாயை- ஒரு பார்வை- முதல் பகுதி’ என்று முதலில் இணையத்திலும் (தமிழ் ஹிந்து) பிறகு புத்தகமாகவும் வெளிவந்தது. அடுத்த பகுதி துக்ளக் வார இதழில் தொடராக 103 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. இது ‘திராவிட மாயை- ஒரு பார்வை-இரண்டாம் பகுதி’ என்ற பெயரில் புத்தகமாக வந்தது. இது குறிப்பிடும் காலகட்டம் 1944 முதல் 1967 வரை. உங்கள் கையிலிருக்கும் ‘திராவிட மாயை- ஒரு பார்வை- மூன்றாம் பகுதி’ 1967 முதல் 1981 வரை உள்ள காலகட்டத்தைக் குறிப்பிடும் பகுதியாகும். இந்தக் காலம் எம்.ஜி.ஆருடைய காலம், அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட காலம். திராவிட இயக்கத்தின் போக்கை மடைமாற்றியவர் எம்.ஜி.ஆர். என்பதை இனிவரும் பக்கங்களில் நிறுவ முயற்சிக்கிறேன். திராவிட மாயை முதல் பகுதி, இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியை மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு முரண்பாடு தென்படலாம். முதல் இரண்டு பகுதிகளில் சி.என்.அண்ணாதுரை மீது வீசப்படும் வெளிச்சம் விமர்சனத் தன்மையோடு இருப்பதாகவும் மூன்றாம் பகுதி அவருடைய கீர்த்தியைக் கூட்டுவதாகவும் தோன்றலாம். இ௮தச் சிக்கல் என்னுடைய வார்த்தைகளாலும் வாக்கியங்களாலும் ஏற்பட்டதல்ல. அதற்குக் காரணம் அண்ணாதுரையின் பொதுவாழ்க்கையில் ஏற்பட்ட அல்லது அவரே ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாறுதல்கள் தான்.