Description
சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர், லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை பெரோஸ் சந்த் வெளியிடயிருந்தார். அப்படித்தான் அந்தப் பத்திரிகையில் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற பிரசித்தி பெற்ற கட்டுரை வெளியானது.... பின்னர் லஜ்ஜாவதி அவற்றையெல்லாம் 1938ஆம் ஆண்டு பிஜய் குமார் சின்கா என்பவரிடம் அளித்தார். சின்கா அவற்றை பெயர் தெரியாத ஒருவரிடம் ஒப்படைத்தார். அந்த நண்பர் போலீசுக்கு பயந்து அவற்றை அழித்து விட்டார்... சிறைக் குறிப்பேட்டை எப்படியோ மீட்டது நமது அதிர்ஷ்டமாகும். அது முழுமையாக மறுபதிப்பு செய்யப்படுகிறது.
-சமன்லால்