Description
அரபு மன்னர் ஷாரியாருக்கு பெண்கள் மீது அடங்காத மோகம். தினம் ஒரு பெண்ணை மணப்பது, மறுநாள் காலை அவளைக் கொன்று விடுவது என்று பெண்களை வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அவரைத் திருத்த எண்ணிய அமைச்சரின் மகள் ஷாரஜாத், மன்னரை மணந்து கொள்கிறாள்.ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதை சொல்கிறாள். கதை கேட்கும் ஆவலில் அவளை கொல்லாமல் விடுகிறார். மொத்தம் 1001 நாட்கள் கதைகள் தொடர்கின்றன. அந்தக் கதைகளை கேட்டதும் மன்னன் மனம் மாறுகிறார். பெண்கள் மீதான வெறுப்பை கைவிடுகிறார்.அழகி ஷாரஜாத்தை தன்னுடைய ராணியாக்கிக்கொள்கிறார். மன்னருக்கு ஷாரஜாத் சொன்ன கதைகள், 1001 இரவு கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. உலகின் பெரும்பாலான மொழிகளில் இக்கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.ப்ரியா பாலு தமிழாக்கம் செய்துள்ள 1001 இரவுகள் கதைகள், விறுவிறுப்பாக உள்ளன. தமிழில் ஏற்கனவே 1001 இரவு கதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. எனினும் இப்போது வெளிவந்துள்ள இந்த நூல் பாராட்டத்தக்க விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.