ஜீவா பார்வையில் பாரதி


Author: கே. ஜீவபாரதி

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

தமிழக அரசியல்வாதிகளில் தனித்துவமிக்கவர் ஜீவா. இவர் மிகச் சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி. தொடக்கத்தில் காந்தீய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் சுயமரியாதை கருத்துக்களை ஏற்று, இறுதியில் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் பேச்சில் தொடாத துறைகளே இல்லை. இடம் பெறாத தலைவர்களே இல்லை.காந்தியடிகள், வ.உ.சி., பரலி சு.நெல்லையப்பர், மறைமலையடிகள், வ.ரா. போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஜீவா, பாரதியாருடன் பழகியதில்லை. இருந்தபோதிலும் பாரதியின் படைப்புகளை படித்து, தமிழ் மக்களிடம் பாரதியைக் கொண்டு செல்லும் பணியில் முழுச்சுடன் ஈடுபட்டவர் ஜீவா.மகாகவி பாரதியார் பற்றி ஜீவா பேசிய சொற்பொழிவுகளைக் கவிஞர் கே. ஜீவபாரதி தொகுத்து வழங்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் ஜீவாவின் பங்கு மகத்தானது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். (விலை 200ரூ.)ஜீவபாரதி எழுதிய ஜீவா பார்வையில் கலை இலக்கியம் (ரூ. 150), ஜீவா பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் (விலை ரூ.150) ஆகிய நூல்களையும் வெளியிட்டு உள்ளது.

You may also like

Recently viewed