Description
தாலாட்டுப்பாடல் தொடங்கி, ஒப்பாரிப்பாடல்கள் வரையிலான வாழ்க்கையின் எல்லாச் சூழல்களிலும் பாடப்படும் அனைத்து நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பு நூல். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடையே வழங்கி வருவனவாகும்.வேளாண் மக்களால் வேளாண் தொழில் நிகழ்கின்ற பொழுது நூலாசிரியர் முனைவர் இரா. மனோகரனால் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு நூலாக்கப்பட்டுள்ளது. பாடல்களைப் பாடிய பாட்டாளிகளில் பெண்களே அதிகமாக உள்ளனர்.ஆண்கள் எண்ணிக்கையில் குறைவு. பாடல் பாடியவரின் பெயர், வயது, ஊர் எனக் கொடுக்கப்பட்டிருப்பது முறையான கள ஆய்வின் நெறியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 1128 பக்கங்கள் கொண்ட இந்தப் பெருநூல், தமிழ் உலகத்தின் பண்பாட்டு ஆய்வுக்கும், சமூக ஆய்வுக்கும் பெரிதும் பயன்படும்.