Description
வாய்மொழியாக வழங்கப்பெற்று மக்களுக்கு நீதி புகட்டக்கூடிய கதைகளாக நாம் அறியப்படுவது தென்னிந்தியாவில் தெனாலிராமன் கதைகள். வட இந்தியாவில் பீர்பல் கதைகள். அக்பர் பீர்பல் மேல் கொண்டிருந்த அன்பு, நம்பிக்கை, நெருக்கம், பீர்பலின் வீரம் உள்ளிட்ட அனைத்தும் கதைவழி அறியப்படுகின்றன. உண்மைகளை வெளிப்படையாக பிறர் மனம் புண்படாத வகையில் பதில் சொல்வதில் பீர்பல் வல்லவர் என்பதையே இக்கதைகள் உணர்த்துகின்றன.அக்பரையே சில இடங்களில் பீர்பல் முட்டாளாக ஆக்கிவிடும் காட்சிகளும் உண்டு. ஆனால் அக்பர் அவர்மேல் கோபம் காட்டாமல், மேலும் மேலும் அவர் வாயைக் கிளறி பல உண்மைகளை வரவழைக்கும் கதைகள் ஏராளம் கதைகள் ஒவ்வொன்றும் அறிவின் தேடல்.