வரலாற்று மானிடவியல்


Author: பக்தவத்சல பாரதி

Pages: 224

Year: 2013

Price:
Sale priceRs. 165.00

Description

இந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது. வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது. வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந்நூலின் இலக்குகளில் ஒன்றாகும். தேசம், மன்னர் சார்ந்து வரலாறு எழுதுவதிலிருந்து வட்டார வரலாறு, குடும்ப வரலாறு, இனக்குழு வரலாறு, சிறு சமூகத்தின் வரலாறு, குலத்தின் வரலாறு, நுண் வரலாறு என புதிய வகைமைகளில் வரலாறு எழுதப்பட வேண்டியதன் அணுகுமுறைகளையும் இந்நூல் காட்டுகிறது. இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் பலவும் ஆய்வுத்திட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்வேறு அரங்குகளில் கருத்தரங்கப் பொழிவுகளாக வழங்கப்பட்டவை.

You may also like

Recently viewed