Description
எத்தனை இடர்பாடுகள் ஏற்படினும் தானே சமன் செய்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையின் அம்சம்தான் பெண் என்பதை அடையாளப்படுத்துபவை சக்தி ஜோதியின் கவிதைகள். அரசியலாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலையும் மனத்தையும் கட்டுடைக்கும் இவரது மொழி இன்றைய பெண் கவிஞர்களிடமிருந்து தனித்தியங்குவது.ஆண் பெண் இடையிலான மௌனவெளிக்குள் துளிர்த்திருக்கின்ற நுட்பமான நீர்மைப் பொழுதுகளையும் இடைவெளிகளையும் அன்பின் வழி கடந்து செல்கிற வாழ்பனுபவமிக்க பெண்ணின் குரலாக அவை ஒலிக்கின்றன. வாசகனை எந்தவித படிம, அரூபச் சிக்கல்களுக்கும் உள்ளாக்காமல் தன்னோடு அழைத்துச் செல்லும் கவிஞர் சக்தி ஜோதியின் ஆறாவது கவிதைத் தொகுதி இது