கர்ணா!நீ மஹத்தானவன்


Author: ஆர்.பி.வி.எஸ்.மணியன்

Pages: 160

Year: NA

Price:
Sale priceRs. 120.00

Description

தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது.கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்றவன். எவர் எந்த ஒரு நிலையிலும் தன்னைப் பெற்றவர்களையும் தனது குடும்பத்தையும் பெருமையாக நினைக்கிறார்களோ, அவர்களே உண்மையான சுயமரியாதையுடையவர்கள். அந்த வகையில் கர்ணன், துரியோதனனால் அங்க தேசத்திற்கு மன்னனாக முடிசூட்டப்பட்டஉடன், தேர் சாரதியான தன் தந்தையை அவையோருக்கு அடையாளம் காட்ட தயங்கவில்லை.பட்டாபிஷேகத்தால் நனைந்த தன் உடைகளோடு ஓடோடிச் சென்று தன் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கி ஆரத்தழுவி மகிழ்ந்தவன் கர்ணன். வியாச பாரதத்தில் இருந்து, வில்லிபுத்தூரார் எழுதிய பாரதத்தில், கர்ணனுடைய வரலாறு மாறுபடும் இடத்தையும் இந்நூல் அலசுகிறது. இந்நூலை படித்து முடிக்கிற பொழுது, நம் உள்ளத்தில் தோன்றும் உணர்வும் இதுதான் கர்ணா உண்மையிலேயே நீ மஹத்தானவன்தான்.

You may also like

Recently viewed