Description
மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும், முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின், ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது, கவிதையின்சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும், அப்படியான படிமங்களில் கவரப்பட்டு மனமொன்றிப்போகிற பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.வழமையான நவின பெண் கவிஞர்களின் விரிவு வேலியிலிருந்து விலகி வேறொரு தளத்தில், பிறழ்வு நிலை சந்தோஷச் சித்திரங்கள், நனவு நிலைத் துயரங்கள், வருத்தம் தோய்ந்த தொய்வற்ற சுய சம்பாஷணைகள் எனத் தனது கவிதையாடலை பரமேசுவரி நிகழ்த்தியிருக்கிறார். எனக்கான வெளிச்சம், இசை புதையும் வெளி என்ற முதல், இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின்னர், ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக வாசிப்பின் கடாட்டத்தில் ஒரு ரசவாதத்தை நிகழ்த்துகிற கவிதைகளை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்பான தனியள்