Description
உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும், கதை என்பது, நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும்போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையைக் கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை , அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் இந்நாவலின் கதாபாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன,