மதிநுட்பக் கதைகள்


Author: வாண்டு மாமா

Pages: 312

Year: NA

Price:
Sale priceRs. 350.00

Description

கதைகள் கேட்டும், படித்தும் தம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டனர் நம் முன்னோர். கதைகளின் நோக்கமே மனக் கோணல்களை நீக்குவதுதான். சில கதைகள் ஒருவர் அடி மனதில் ஆழப்பதிந்து, அவர் வாழ்நாள் முழுவதும் அதை மறக்காமல், அக்கதை கூறும் நல்வழியில் சென்று, புகழ்பெறுவர் என்றும் கூறலாம்.எடுத்துக்காட்டாக அரிச்சந்திரன் கதை, மகாத்மா காந்தியடிகள் வாழ்வில் என்றும் வழிகாட்டியாக நின்று, அவரைப் பெருமைப்படுத்தியதைக் கூறலாம். இந்நூல், இக்காலச்சிறுவர், சிறுமியருக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 67 கதைகள் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு கதையும் ஒரு நீதியையோ அல்லது சிறந்த பண்பினையோ தெரிவிக்கும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஜாதி மாம்பழம் எனும் கதை, மனிதனிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் குணம் வேண்டும் என்றும் (பக். 9), ஒன்றே செய்க, நன்றே செய்க என்று ஒரு கதையும்(பக். 51), அரசி சிரித்தாள் என்ற கதை, குழந்தைச் செல்வத்தின் அருமையையும் (பக். 156) நமக்குத் தெரிவிக்கின்றன. நூலாசிரியர் வாண்டு மாமாவின் பணி பாராட்டத்தக்கது.

You may also like

Recently viewed