Description
நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல்.
சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.
இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்:
அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி.
மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி.
மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி.
எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி.
நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி
மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி