Description
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் குறித்தும் பல நூல்கள் வந்திருப்பினும், “மேதகு பிரபாகரன் - வாழ்வும் இயக்கமும்”நூல் - ஒரு சிறப்பான ஒளிப்படத் தொகுப்பு நூல். அடிப்படையில் ஒளிப்படங்கள் மூலம் கதை சொல்லும் பாணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான நிகழ்வுகளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர் “ஊடகச் செம்மல்“பவா சமத்துவன் அவர்கள்.
நிழற்படங்களின் மூலமாக நிகழ்வுகளை ஆவணப்படுத்தியது மட்டுமல்லாமல், பிரபாகரன் எதுவரை படித்தார்? அவர் ஏன் ஆயுதப் போராட்டத் தைக் கையிலெடுத்தார்? அவருக்கு அந்த உணர்வை ஊட்டியது யார்? விடுதலைப் புலிகள் அமைப்பு மற்ற போராளிக் குழுக்களை அழித்தொழிக்கும் சர்வாதிகார கும்பலா? பொது மக்களை மிரட்டி இயக்கத்தில் சேர்த்திருக்கிறாரா? போதைப் பொருள் கடத்தி ஆயுதங்கள் வாங்கினாரா? தமிழ் முஸ்லிம்களை அவர்கள் எவ்வாறு கருதினார்கள்? தமிழீழ விடுதலைக் குப் பிறகு அங்கு அமைக்கப்போகும் அரசு பற்றி தெளிவான சிந்தனை இருந்ததா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் அங்கும் இங்கும் கேட்கப்படுகின்றன. இவற்றுக்ல்லாம் பிரபாகரன் வழியாகவே இந்நூலில் விடை கிடைக்கின்றன.
2009-இல் சிங்கள இனவெறியர்களால் நிகழ்த்தப் பட்ட இன அழிப்பிற்கு சீனா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகள் துணைபோனது, கியூபா போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்தது. பொதுவுடைமைவாதிகளை - மனித நேயப் பற்றாளர்களை நிலைகுலையச் செய்தது. இதற்கு 1993 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் கூறியதை நினைவூட்டுகிறார் நூலாசிரியர்.
“மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழல வில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன்வைக்கிறது. இவ்வுலகில் ஒழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன. அறநெறி சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.
நாடுகளுக்கிடையே யான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நலங்களைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்களை உடனடியாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது”.
இந்திய சமூகநீதி ஊடக மைய வெளியீட்டில் நான் காவது நூலாக வெளிவந்துள்ள இந்நூல், 12 பகுதிகளில் ஒளிப்படங்களுடன் வந்துள்ள கையேடாகும். சில நிகழ்வுகள், உரைகள், நேர்காணல்கள், அமைப்பின் நிலை பற்றி தெரிந்து கொள்ள, இந்நூல் பயன்படும்